சாகப்போகிற நேரத்தில் நன்மைகளை செய்கிறேன் - நெல்லையில் கொலையான ஜாகீர் உசேன் வெளியிட்ட வீடியோ

நெல்லையில் இன்று மார்ச் (18 ) ஜாகிர் உசேன் என்கிற பிஜிலி என்ற ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டவுணிலுள்ள பள்ளி வாசல் அருகே மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனுக்கும் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்கிற தௌபிக் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. அந்த முன்விரோதத்தில்தான் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர்கள் அக்பர்ஷா, கார்த்திக் ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

அதோடு, ஜாகிர் உசேன் கொலைக்கு காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளே காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், தமிழக காவல்துறையில் 1986 ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியவர். 2009 ஆம் ஆண்டு போலீசில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

கொலை செய்யப்பட்ட ஜாகிர்உசேன் மீது கடந்த கடந்த ஜனவரி 4 ஆம் தேதி தேதி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி துணை கமிஷனர் கீதாவிடம், தன்னை சாதியைச் சொல்லி ஜாகிர் உசேன் திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்தார் என்று புகார் அளித்தார். இதையடுத்து, ஜாகிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தி தரப்பில் இருந்து பல முறை ஜாகிர் உசேனுக்கு மிரட்டல்கள் வந்துள்ளது.


கொலை செய்யப்படுவதற்கு முன்பே வீடியோ ஒன்றை ஜாகிர் உசேன் பதிவு செய்திருந்தார். அதில், இடபிரச்னை குறித்தும் தனக்கு மிரட்டல் வருகிறது . ஆனால் போலீஸார் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுத்ததால்தான் ஓய்வு பெற்ற எஸ்.ஐ - ஜாகிர் உசேனை கொலை செய்து விட்டனர். நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம்" என்றனர்.

கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, `தமிழக முதல்வருக்கு வணக்கம். தமிழகத்தில் வாழ்கிற கோடிகணக்கான மக்களில் ஒரு மூலையில் நான் வசித்து வருகிறேன். இறக்க போகும் நேரத்தில் நன்மையாக காரியங்களை செய்து வருகிறேன். இதை நான் சொல்ல வேண்டியதில்லை. எங்கள் பகுதியிலுள்ள மக்களே சொல்வார்கள். விசாரணை செய்யுங்கள். விசாரிக்க மாட்டீர்கள். என்னை கொலை செய்ய பல கும்பல்கள் சுற்றிக் கொண்டிருக்கிள்னறன.

அதில் முக்கியமானவர் தௌபிக். அவர் என் மீது பொய் புகார் கொடுக்கிறார். அதை கொண்டு என் மீதும் என் மனைவி மீதும் பிசிஆர் வழக்கு போட்டிருக்கிறார்கள். சாகப்போகிற நான் என்னவேண்டும் என்றாலும் பேசலாம். எப்படியும் என்னைக் கொன்னுவிடுவாங்க'என எனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.