
நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலராக பானுபிரியா பொறுப்பேற்றார்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமதி பானுப்பிரியா அவர்கள் சிவகாசி பொறியியல் கல்லூரியில் பி.இ படித்து விட்டு நெல்லை மாவட்டம் மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் எம்.இ. படித்துள்ளார். படந்த 2019 ஆம் ஆண்டு குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்று தீயணைப்புத்துறையின் பணிக்கு சேர்ந்தார்.
சென்னையில் பயிற்சி முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்தார். கடைசியாக தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்தா. சமீபத்தில் குற்றாலம் வெள்ளப்பெருக்கின் போது வெள்ளத்தில் சிக்கிய 42 பேரை துரிதமாக மீட்டது இவரது சமீபத்திய சாதனை . பானுபிரியா திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் தீயணைப்பு மாவட்ட அலுவலர் என்ற பெருமையை பெறுகிறார். இவரது, சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும்.