ஜாகிர் உசைன் கொலை : கொலையாளி முகமது டௌபிக்கை சுட்டு பிடித்த நெல்லை போலீஸ்

நெல்லை நகரில் நடந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசைன் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி முகமது தவுபிக் (எ ) கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை நடத்தினர்.

நெல்லை பெருமாள்புரம் காவல்நிலையத்துக்குட்பட்ட ரெட்டியாப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த முகமது டௌபிக்கை பிடிக்க முயன்ற போது, தலைமை காவலர் ஆனந்தை தவுபிக் அரிவாளால் வெட்டினார். இதையடுத்து, தவுபிக்கை துப்பாக்கி சூடு நடத்தில் போலீசார் பிடித்தனர். இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரணடைந்துள்ளனர். மேலும், முகமது உசைன் கொலையை அடுத்து, டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.