
திருநெல்வேலி டவுன் பேட்டை சாலையில் பள்ளிவாசலுக்கு சொந்தமாக கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளது. அந்த சொத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி நடந்த நிலையில், அதை ஜாகிர் உசேன் தடுத்ததால், கிருஷ்ணமூர்த்தி என்ற டௌபிக்குக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி பட்டியலினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நூர்ஜகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால், இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ளார்.
இந்நிலையில், பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்து என்னுடையை பாட்டிக்கு சொந்தமானது. அதனால், அது எனக்குதான் சொந்தானது என்று நுர்ஜகான் கூறி வந்துள்ளார். மனைவிக்கு ஆதரவாக டௌபிக் செயல்பட்டு வந்துள்ளார்.
ஆனால், ஜாகிர் உசேன் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பள்ளிவாசல் சொத்தை நூர்ஜகான்,தாவூகித் ஆக்கிரமிக்க முயற்சிப்பது குறித்து வக்ஃப் போர்டு தலைவர் நவாஸ் கனிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பினார். இதனால், டௌபிக் தரப்பு கடும் ஆத்திரமடைந்தது.
இதற்கிடையே, திருநெல்வேலி டவுன் இன்ஸ்பெக்டரிடம் தன்னை ஜாகிர் உசேன் சாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டியதாக டௌபிக் புகார் கொடுத்துள்ளார். இதனால் ஜாகிர் உசேன், அவரது மனைவி சுஜி சுனிதா மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது.
இதையடுத்து, தன் மீது டௌபிக் கொடுத்த புகார் வழக்குப்பதிவு செய்தது செல்லாது என்றும் அவர் பட்டியலின சமூகத்தைச் (தேவேந்திர குல வேளாளர்) சேர்ந்தராக இருந்தாலும், தற்போது இஸ்லாமியராக மதம் மாறிகொண்டவர். அதனால், அவர் பட்டியலினத்தவர் இல்லை என்று ஜாகிர் உசேன் தெரிவித்துள்ளார். இதனால், போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்யாமல் இருந்துள்ளனர். எனினும். திமுகவை சேர்ந்தவர்கள் ஆதரவுடன் முகமது உசைன் மற்றும் அவரின் மனைவிக்கு தொடர்ந்து, நெருக்கடி கொடுத்து வந்ததாக சொல்கிறார்கள்.