கழுத்தில் மதுபாட்டில் மாலை : வாயில் சங்கு ஓல்டு மங்க் கடைக்கு எதிராக நெல்லை முன்னாள் மேயர் அதிரடி

கழுத்தில் மதுபானம் மாலையுடன் சங்கு ஊதி ஊர்வலமாக வந்து தமிழக முதலமைச்சர் புகைப்படத்தை டாஸ்மாக் கடையில் ஒட்டி பாஜக சார்பில் போராட்டத்தை நடத்திய நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் தமிழக முதலமைச்சர் படத்தை வைக்க வேண்டும் . டாஸ்மாக் என்ற பெயரை தமிழில் மாற்றி கலைஞர் மதுபான கூடம் என வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது .

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் பாஜக நிர்வாகியுமான புவனேஸ்வரி தலைமையில் பாஜக நிர்வாகிகள் இருவர் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கழுத்தில் மதுபான பாட்டில்கள் சங்கு ஊதி ஊர்வலமாக சென்றனர்.

பின்னர், தமிழக தமிழக முதலமைச்சர் புகைப்படத்தை டாஸ்மாக் கடையில் ஒட்டினர். ஏற்கனவே தமிழக பாஜகவினர் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது . ஆனால், போலீசாருக்கு தெரியாமலேயே நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி செய்த செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.