வள்ளியூரில் சிட்டுக்குருவி தினம் : பசுமை கரங்கள் சார்பில் 5,000 மரங்கள் வளர்க்க திட்டம்


இயற்கையை பாதுகாக்கும் சிட்டுக்குருவிகளுக்கு உணவளித்து இனப்பெருக்கத்தை பாதுகாக்கும் வகையில் வள்ளியூர் பசுமை கரங்கள் சார்பில் உலக சிட்டுக்குருவி தினவிழா 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உலக சிட்டுக்குருவி திமான நேற்று வள்ளியூரில் நடந்த உலக சிட்டுக்குருவி தின விழாவில் பங்கேற்க வந்தவர்களுக்கு மரம் வளர்ப்பதின் பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.

மேலும் வள்ளியூரில் அடுத்தகட்டமாக 5,000 மரங்கள் நட்டு பசுமையான வள்ளியூரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பறவைகள் இனம் அழிந்து வருவதால் அவை வாழும் சூழலை ஏற்படுத்தி பறவை இனங்களை பாதுகாக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வள்ளியூர் காவல் ஆய்வாளர் நவீன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இலவசமாக சிட்டுக்குருவி கூண்டுகளை வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.