சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்க நிர்வாகிகள் இளையராஜாவுடன் சந்திப்பு


சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கத்தின் நிர்வாகிகள், இசைஞானி இளையராஜாவை சென்னையிலுள்ள அவருடைய ஸ்டூடியோவில் நேரில் சந்தித்து, பாராட்டுகளை தெரிவித்தனர். அப்போது, கடந்த ஜனவரி மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு நன்றியைத் தெரிவித்தனர். அதோடு, சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசை நிகழ்த்தியதற்காகவும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

சந்திப்பின் போது, நெல்லை மாவட்டத்தின் புகழ்பெற்ற இடங்களின் புகைப்படங்களை நினைவு பரிசாக அவருக்கு வழங்கினர். இது, தமிழ்நாட்டின் கலை, பாரம்பரியங்களுடன் இளையராஜாவுக்குள்ள ஆழமான தொடர்பை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.

நிகழ்வில் சங்கத்தின் தலைவர் சைமன் ஜெய்குமார், பொதுச்செயலாளர் சங்கர் மணி, மூத்த நிர்வாகிகள் டாக்டர். ரத்தினவேல் ராஜன் மற்றும் பாஞ்சி சுப்ரமணியன், மற்றும் சங்கத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்க நிர்வாகிகளுக்கு இளையராஜா நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.