
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அணைகளான காரையார் சேர்வலாறு ,மணிமுத்தாறு அணைகள் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் போன்ற தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன.
இந்த நிலையில் இன்று (மார்ச் 21 )காலை நிலவரப்படி காரையார் அணையின் நீர்மட்டம் 92.5 அடியாகவும், அணைக்கான நீர்வரத்து 214.12 கன அடியாகவும் உள்ளது. மேலும் அணையில் இருந்து விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் 156 அடி கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 103.84 அடியாக உள்ளது. கடந்த 5-ம் தேதி முதல் இன்று வரை சுமார் 15 நாட்களுக்கு மேலாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேலாக உள்ளதால், கோடை காலங்களில் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து விடலாம் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.