ராதாபுரம் சிற்றாறு பட்டணம் கால்வாய் : ஷட்டரை சரி செய்தீர்களா? இல்லையா? - ஆட்சியர் கேள்வி


திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா சிற்றாறு பட்டணம் கால்வாயில் நிலப்பாறையில் அமைந்து உள்ள தலைமதகு மடையில் தினந்தோறும் 150-கனஅடி தண்ணீர் குறையாமல் கால்வாய் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது . ஆனால் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் கால்வாய் ஒருநாள் கூட 75-கனஅடி தண்ணீர் கூட திறந்துவிடப்படவில்லை.

இது தொடர்பாக பொதுப்பணி துறை செயற்பொறியாளா மற்றும் உதவி செயற்பொறியாளர், உதவி பாசனப்பிரிவு வடக்கன்குளம் பொறியாளர்களிடம் பலமுறை மனுகொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இராதாபுரம் தாலுகா விவசாயிகள் வேதனையடைந்தன.ர

இராதாபுரம் தாலுகாவில் கல்குவாரி இயங்கி வருகிறது. இதை காரணம் காட்டி, இராதாபுரம் சிற்றாறு பட்டணம் கால்வாய் தண்ணி திறந்து விடுவதற்கு அதிகாரிகள் மறுத்து விடுகின்றனர். இதை சுற்றிக்காட்டி ரஜனி என்ற விவசாயி நெல்லையில் இன்று நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் சொன்னார்.

பின்னர், தாங்கள் சந்திக்கும் துயரங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது, அதிகாரிகள் ஷட்டர் பிரச்னை இருப்பதாக கூறி சமாளித்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் குமார், உடனடியாக ஷட்டரை சரி செய்து தண்ணீர் வழங்க உத்தரவிட்டார்.

விவசாயி ரஜனி கூறுகையில், நிதி இல்லை என்று சாக்கு போக்கு கூறுகின்றனர். கால்வாயை தூர் வார மறுக்கின்றனர். ஷட்டரையும் முறையாக பராமரிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.