காவல்கிணறு : விபத்தில் 6ம் வகுப்பு மாணவர் பலி

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம்- காவல்கிணறு சாலையில் அன்னை நகர் பெயர் பலகை அருகில் இன்று (மார்ச் 22 )இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பணகுடி புனித . அன்னாள் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் சபரி ராம்(11) என்பவர் பலியானார். பலியான மாணவர் வடக்கன்குளம் அருகேயுள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஆதித்தன் என்பவரது மகன் ஆவார்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் ராஜாராம் விசாரணை செய்து வருகிறார். விபத்தில் பள்ளி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.