நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை : இளஞ்சிறாருக்கு தொடர்பு: தௌபிக்கின் மனைவி எங்கே?


நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ., ஜாகிர் உசேன் கொலை சம்பவத்தில் இளஞ்சிறாருக்கு தொடர்பு இருப் பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் தனிப்படை போலீ சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை டவுனைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., ஜாகிர்உசேன் பிஜிலி (60) கடந்த 18ம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் கிருஷ்ணமூர்த்தி என்ற தௌபிக் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தைக்கா முத்தவல்லியாக இருந்த இவர், வக்பு போர்டு நிலம் தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட் டது விசாரணையில் தெரியவந்தது.

தன்னை கொலை செய்ய முயற்சி நடப் பதாக சில வாரங்களுக்கு முன்பு ஜாகிர் உசேன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதையும் மீறி நடந்த இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாகிர்உசேனின் புகாரை தகுந்த முறையில் விசாரிக்காத அப்போதைய நெல்லை டவுன் உதவி கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் கோபாலகி ருஷ்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வழக்கில் தொடர் புடைய நெல்லை டவுனைச் சேர்ந்த தௌபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் துப் பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காலில் காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிருஷ்ண மூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடும் பணியில் தனிப்படை போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வழக்கில் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரணடைந்த பால்கட்ட ளையைச் சேர்ந்த கார்த்திக், நெல்லை டவுனைச் சேர்ந்த அக்பர்ஷா ஆகியோரை காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். "எங்களிடம் இடம் தொடர்பாக ஜாகிர்உசேன் பிரச்னை செய்து வந்தார். அந்த இடத்தை கைப்பற்ற அவர் தடையாக இருந்தார். அதனால், மூன்று பேரும் சேர்ந்து அவரை வெட்டிக் கொலை செய்தோம்" என அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் நடத்திய 16 வயது இளஞ்சிறாருக்கு ஜாகிர் உசேன் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கொலை நடந்த நாளில் கொலையாளிகளுடன் தகவல் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் அந்த இளஞ்சிறாரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.