
தமிழகத்திற்கு தண்ணீர் தராத கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடகா துணை முதல்வர் டி கே சிவக்குமாரை கண்டித்து பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் வீட்டில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு (டிலிமிடேஷன்) ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க நேற்று சென்னை வந்துள்ளார். இந்த கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட பல மாநில தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கேரள மற்றும் கர்நாடக அரசுகள் தமிழகத்தின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன என்று குற்றம்சாட்டி, முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பதை கண்டித்து, மார்ச் 22 ஆம் தேதி கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, பாஜகவினர், இன்று காலை 10 மணிக்கு தங்களது வீட்டில் ருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த வகையில், நெல்லை பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவும் பாரதிய ஜனதா சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றறப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.