மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியருக்கு நெல்லை வாழ் மக்கள் சங்க தலைவர் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரபட்டி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் , இது வரை ரயிலிலும் ஏறவில்லை. விமானத்திலும் ஏறவில்லை”என தலைமை ஆசிரியர் பொன்ராஜிடத்தில் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆசிரியர் பொன்ராஜ், கடந்த 22 ஆம் தேதி காலை 6மணிக்கு தூத்துக்குடியில் இருந்து மாணவர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்து சென்றார்.

தொடர்ந்து, மின்சார ரயிலில் வண்டலூர் பூங்கா சென்று மாணவர்கள் சுற்றி பார்த்தனர். பின்னர், மீண்டும் மெட்ரோ ரயில் மூலம் எழும்பூர் ரயில் நிலையம் வந்து 22 ஆம் தேதி இரவு முத்துநகர் விரைவு ரயிலில் அடுத்த நாள் காலை தூத்துக்குடி போய் சேர்ந்தனர்.

ஆசிரியரின் செயலைப் பாராட்டும் விதமாக சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் சைமன் ஜெயக்குமார் ஆசிரியர் நெல்சன் பொன்ராஜை விமான நிலையத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். மேலும், மாணவச் செல்வங்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி உற்சாகப்படுத்தினார். அப்போது, சங்க நிர்வாகியும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜெனிஷ் உடன் இருந்தார்.