
திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள கொக்கிரகுளம் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், இதுவரை அந்த பகுதிகளில் தெருக்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. பேராசிரியர் தெரு, சாலை தெரு உள்ளிட்ட பல தெருக்கள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.பாதாள சாக்கடை பணிக்காக ஏற்கனவே தோண்டப்பட்ட சாலைகள் சரியாக சமப்படுத்தப்படவில்லை . இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழைக்காலத்தில் நீர் தேங்குவதால், மோசமான சுகாதாரப் பிரச்னையும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலைகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.