
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படக்கூடிய பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தை சுற்றிலும் பல பள்ளி நிறுவனங்களும் கல்லூரி நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு முடிந்து இன்று ( மார்ச் 25)வீட்டிற்கு செல்வதற்காக ஏராளமான மாணவ மாணவிகள் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் குவிவார்கள்.
அப்போது, மாணவர்கள் மத்தியில் எந்த ஒரு மோதலும் ஏற்படாமல் இருப்பதற்காக நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் சந்தோஷ் உத்தரவின் பேரில் பல பேருந்து நிலையங்களில் போலீசார் லத்தியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை பேருந்து நிலையம், ஜங்ஷன் பேருந்து நிலையம் மற்றும் நெல்லை புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாணவ மாணவிகள் அதிகளவில் கூடுவார்கள். இதனால், பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட போலீசார் ஒரு ரோந்து வாகனங்களுடன் தீவிரமாக கண்காணித்தனர். ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட போலீசாரும் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
மாணவர்கள் மாணவிகள் கூட்டமாக சேர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்திருந்தாலோ தேவையில்லாமல் நின்று பேசிக் கொண்டிருந்தாலோ அவர்களை அழைத்து அறிவுரை வழங்கி போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் ஒருவர் மீது ஒருவர் பேனா இங்கு அடித்து விளையாடுவது ,கொஸ்டின் பேப்பரை கிழித்து எரிந்து சாலையில் நின்று கூச்சலிடுவது, இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் ரேயில் ஈடுபடுவது போன்ற ஒழுங்கினை செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே நெல்லை மாநகர காவல் துறையினர் எச்சரித்திருந்தனர். இதனால், இத்தகைய செயல்கள் இந்த ஆண்டு வெகுவாக குறைந்திருந்தன.
கடந்த ஆண்டு தேர்வு முடிந்து வந்த மாணவர்கள் பலர் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த ஆண்டு அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் போலீசார் பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.