ஆளும் கருப்பு... பெயரும் கருப்பு, உள்ளமோ வெள்ளை- எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்ட கருப்பசாமி பாண்டியன் திடீர் மறைவு

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளரான கருப்பாசாமி பாண்டியன் காலமானார்.

நெல்லை மாவட்டத்தின் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது

கடந்த 1977 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றார். 1980 ஆம் ஆண்டு தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், திமுகவில் இணைந்மார். அந்த கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தார்.

2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2015 ஆம் ஆண்டு மே மாதம் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட பின்னர், ஜெயலலிதாவின் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். திருநெல்வேலி மாவட்ட த்தின் முக்கிய அதிமுக பிரமுகராக பார்க்கப்பட்டவர்.ஆளும் கருப்பு பெயரும் கருப்பு ஆனால் உள்ளமோ வெள்ளை என எம்ஜிஆரால் பாராட்டப்பட்டவர். தற்போது, கருப்பசாமி பாண்டியன் அதிமுக அதிமுக அமைப்பு செயலாளரான இருந்து வந்தார். அவருக்கு வயது 76.