
மாவட்டத்துக்கே கலெக்டர் மாதிரி இருந்துட்டு, இப்போ தாசில்தார் மாதிரி வேலை பார்க்க முடியாது 2015-ல் நெல்லை மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்றாகப் பிரித்தபோது ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த கருப்பசாமி பாண்டியன் இப்படித்தான் சொன்னார்.தொடர்ந்து, தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். நெல்லை அரசியலில் கா-னா என்று ஒற்றை எழுத்தால் அடையாளப்படுத்தப்படும் கருப்பசாமி பாண்டியனோட அரசியல் பயணம் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சிறு வயது முதலே எம்.ஜி.ஆர் னா ரொம்பவே பிடிக்கும். 1972 ம் ஆண்டு அதிமுக உருவான போதே அதில் சேர்ந்தார். நெல்லை மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்காக கடும் பாடு பட்டது எம்.ஜி.ஆர் காதுக்கு சென்றது. 1977 தேர்தலுக்கு முன்பாக ராமாவரம் தோட்டத்துக்கு கா-னாவை அழைத்தார் எம்.ஜி.ஆர்.
தேர்தல்ல போட்டியிட விருப்ப மனு கொடுக்கலையா? அப்படினு நேரடியாக கேட்டுள்ளார். உடனே,ஆலங்குளம் தொகுதிக்கு விருப்பமனு கொடுத்துடு. டெபாசிட் பணத்தை நானே கட்டிடுறேனு சொல்லி அனுப்பி வச்சுட்டாரு. இப்படித்தான் கானா அண்ணாச்சி ஆலங்குளம் எம்.எல்.ஏ ஆனார். அதற்கு பிறகு, நெல்லையில் எம்.ஜி.ஆரின் தளபதியாகவே மாறினார் கானா அண்ணாச்சி. இவரை, நெல்லை நெப்போலியன் அப்படினு எம்.ஜி.ஆர் செல்லமாக குறிப்பிடுவார்.
பின்னர், ஒரு முறை நெல்லைக்கு இடை தேர்தல் வந்தது. அப்போது, கருப்பசாமி பாண்டியனை கூப்பிட்ட எம்.ஜி.ஆர்... நீதான் வேட்பாளர்னு சொல்லி அனுப்பியிருக்கார். இந்த சமயத்தில், மற்றொரு விஷயம் எதிர்பாராமல் நடந்தது. தேர்தலுக்கு முன்பு ஆர்.எம்.வீரப்பனின் எம்.எல்.சி பதவி பறிபோகவே, அவரை எம்.எல்.ஏவாக்க வேண்டிய கட்டாயத்தில் எம்.ஜி.ஆர் இருந்தார்.
வேட்பாளர் மாற்றம் செய்யப்படவே கருப்பசாமி பாண்டியனுக்கு வருத்தம் ஏற்பட்டது. கட்சிப்பணியில் இருந்து ஒங்கியதோடு, எம்.ஜி.ஆர் கண்ணில் தென்படவே இல்லை . கருப்பாசாமி பண்டியனின் வருத்தத்தை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், என்னுடைய பயண திட்டம் முழுவதையும் கருப்பசாமி பாண்டியன்தான் பார்த்துக் கொள்வார் என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து சமதானப்படுத்திய கதையும் நடந்தது.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெ-ஜா அணி என அதிமுக உடைந்து போனது. அப்போது, ஜெயலலிதா அணி எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்க இவர்தான் முக்கிய பங்காற்றினார். ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 30 பேரை ராஜஸ்தான் அழைத்துச் சென்று தங்க வைத்திருந்தார். இவர்கள் எல்லாரும் சென்னை வந்து இறங்குவார்கள் என்று எதிரணி காத்திருந்தது.
ஆனால், போக்கு காட்டி திருவனந்தபுரம் வழியாக விருதுநகர் அழைத்து சென்று விட்டார். அங்கிருந்த இருந்த கேகேஎஸ்எஸ்ஆரின் மில்லில் உள்ள விருந்தினர் இல்லங்களில் அவர்களை தங்க வைத்து பார்த்துக் கொண்டார். தொடர்ந்து, சுமுகமாக முடிந்த பிறகே, அவர்களை சென்னை கொண்டு வந்து சேர்த்தார். இரு அணிகளும் ஒன்றிணைந்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜெயலலிதா ஏற்ற பிறகு, அதிமுகவின் முதல் மாநாட்டை நெல்லையில் கருப்பசாமி பாண்டியன் தலைமையில்தான் ஜெயலலிதா நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியில் மிகப்பெரிய செல்வாக்கோடு இருந்தாலும தன்னிச்சையாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் 2000-ம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, திமுகவில் சேர்ந்து சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றினார்.
2006-க்குப் பிறகு நெல்லை மாவட்ட திமுக கழக செயலாளராகவும் செயல்பட்டார். தென்காசி எம்.எல்.ஏவாக இருந்தார். பிறகு, திமுக தலைமையுடன் கசப்பு ஏற்பட்டு மீண்டும் தாய்வீடு திரும்பினார். தற்போது, அதிமுக அவைத்தலைவராக இருந்த போது இறந்துள்ளார். அதிமுக பிரமுகராகவே அவர் இறந்ததுதான் கருப்பசாமிபாண்டியன் செய்த பாக்கியம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.