
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தில், முருகன் என்பவரின் வீட்டில் இன்று அதிகாலை மீண்டும் கரடி புகுந்தது. கரடி புகுந்த காட்நி வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கரடி வீட்டின் அருகே உள்ளே நுழைந்து, அங்குள்ள உணவுப் பொருட்களை தேடுகிற காட்சியும் பதிவாகியுள்ளது.
இந்த ஊருக்குள் கரடி நுழைவது இது முதல் முறையல்ல; கடந்த வாரங்களிலும் அயன் சிங்கம்பட்டி பகுதியில் கரடிகள் பலமுறை புகுந்துள்ளன. கிராம மக்கள் கரடிசகள் அச்சுறுத்தலால் பெரும் பதற்றத்தில் உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கரடியை பிடிக்க ஒரு கூண்டு மட்டும் வைத்தனர், ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. . எனவே, குறைந்தபட்சம் மூன்று கரடி கூண்டுகளை அமைத்து, கரடிகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமத்துக்குள் கரடி புகுந்து சேட்டை செய்வது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றன. அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை கரடிகளை பிடிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.