நெல்லை : நகைக்கடையில் 1½ கிலோ நகை கொள்ளை இரு பெண்கள் உள்டப 5 பேருக்கு சிறை

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண் டன். இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். கடந்த 2018 ம் ஆண்டு இவரது நகைக்கடையின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் அங்கு கிடைத்த கைரேகையின் அடிப்படையில் விசார
ணையை தொடங்கியபோது, நெல்லை நாரணம்மாள்பு ரத்தை சேர்ந்த கணேசன் (வயது 53) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர் நகைக்கடையில்கொள் ளையடித்ததை ஒப்புக்கொண் டார்.

அவர் கொடுத்த வாக்குமூ லத்தின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பொட்டல் பகுதியை சேர்ந்த பெண் மாரிமுத்தார் (43), ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த ஹரிகி ருஷ்ணன் (53), ராஜேந்திரன் (52), ஸ்ரீவைகுண் டம் பொட்டல் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (37) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் மாரிமுத்தார் கடையை நோட்டமிட்டதும், மற்ற 3 பேரும் கொள்ளையடிக்கப் பட்ட நகைகளை பல்வேறு இடங்களில் உள்ள வங்கி களில் அடமானம் வைத்து பணம் பெற்றதும் தெரியவந் தது.

இந்த வழக்கு விசாரணை நெல்லை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்ராஜ் குமார் குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், மாரி முத்தார் ஹரிகிருஷ்ணன், ராஜேந்திரன், ஜெயலட்சுமி ஆகியோருக்கு தலா 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்தவழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மகிழ்வண்ணன் ஆஜரானார்.