கூடங்குளம் : விபத்தில் சிக்கி தலைமை காவலர் பலி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல் உட்கோட்டம், கூடங்குளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார் நாங்குநேரி மறுகால் குறிச்சி ஊரைச் சேர்ந்த முத்தையா (வயது 45 ). இன்று (மார்ச் 28) காலை 8 மணியளவில் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணி முடித்து காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.

பைக் கூடங்குளம் பைபாஸ் சாலை வம்பளந்தான் முக்கு அருகே வந்த போது, எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதினார். இதில், தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கூடங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், நாகர்கோவில் முத்து நியூரோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சொல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார் .