
திருநெல்வெலி மாநகராட்சியில் கட்டட அனுமதி உட்பட பல்வேறு அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆய்வின்றி சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் 100க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் முறையான கட்டட அனுமதி, தீயணைப்பு துறை தடையில்லா சான்று, பயோமெடிக்கல்களை கையாளும் சான்று பெறாமல் இயங்கிய 20 மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நெல்லை மாநகராட்சி நகர்நல அலுவலராக பணி புரிந்த சரோஜா முறைகேடாக இயங்கும் மருத்துவமனைகளின் பட்டியலை வெயிளிட்டார்.
இவர் சிவகாசி மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு, நெல்லையில் அனுமதி இல்லாமல் இயங்கும் மருத்துவமனைகளுக்கு ஆய்வின்றி சானிட்டரி சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஜுன் மாதம் முதர் நவம்பர் மாதம் வரை மட்டும் 28 மருத்துவமனைகளுக்கு சுகதார சான்று வழங்கப்பட்டிருப்பதாக தகவல் உரியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
இதில், காமெடி என்னவெனில் மாநகராட்சி அதிகாரிகளே இந்த மருத்தவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றனர். பின்னர், அவர்களே எந்த ஆய்வும் செய்யாமல் சான்றிதழும் வழங்குவதுதான். இது குறித்து, நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ராவிடம் கேள்வி எழுப்பினார், மவுனமே பதிலாக வருகிறது.