திருநெல்வேலி : மூலைக்கரைப்பட்டியில் கொட்டப்படும் பேட்டரி கழிவுகளால் விவசாயம் பாதிப்பு :

agriculture-affected-by-battery-waste-dumped-in-moolaikaraipatti

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே பேட்டரி தொழிற்சாலை கழிவுகளை கொட்டியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


மூலைக்கரைப்பட்டியில் இருந்து எடுப்பல் செல்லும் சாலையில் உள்ள நீரோடை அருகே மர்ம நபர்கள் பேட்டரி தொழிற்சாலை கழிவுகளை கொட்டியுள்ளனர். இது ஓடை நீரில் கலந்து குளத்து நீரில் கலக்கிறது. இதனால், விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிற்சாலைகளில் கைவிடப்படும் பேட்டரிகளை எரித்து அவற்றிலிருந்து கிடைக்கும் சாம்பல்களை இங்கு கொட்டிச் செல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் ஏற்றி வந்து கொட்டி செல்வதாக தெரிகிறது. இதனால், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டரி கழிவுகளால் பல தீமைகள் ஏற்படுகின்றன. இது மண் மற்றும் நீர்நிலைகளை மாசுப்படுத்துகிறது. கனமான உலோகங்கள் மனிதர்களுக்கு நரம்பியல் மற்றும் மூளை செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்க கூடும். எனவே, பழைய பேட்டரிகளை பாதுகாப்பாக அகற்றுவது மிகவும் முக்கியம் ஆகும்.