நெல்லை: மனைவி பிரிவு : 3 வயது மகளுடன் கிணற்றை நோக்கி சென்ற கணவர், கடைசியில் எடுத்த உருக்கமான முடிவு

wife-separation-husband-goes-to-the-well-with-3-year-old-daughter

மானூர் அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கிணற்றை நோக்கி தனது 3 வயது மகளுடன் சென்ற அவர் கடைசி நேரத்தில் மனதை மாற்றி விட்டு, தனது மகளை படியில் வைத்து விட்டு தனது உயிரை மட்டும் வாலிபர்மாயத்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள அயூப்கான்புரத்தை சேர்ந்தவர் குமார் (33). இவரது மகள் சுபஸ்ரீ (3). குமார் ஓராண்டுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததுள்ளார். இதனால் தனது 3 வயது பெண் குழந்தையை தாய் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரின் மனைவி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் குமாருக்கு 2வது திருமணத்திற்கு அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், மனைவி பிரிந்து சென்றதாலும், தனது 3 வயது குழந்தை தாய் இல்லாமல் சிரமப்படுவதை பார்த்து அவர் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குமார் நேற்று தனது குழந்தை சுபஸ்ரீயுடன் மாயமானார். இருவரையும் குமாரின் தந்தை மாரியப்பன் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், மானூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்த மாயமான இருவரையும் தேடி வந்தனர்.அதோடு , குமாரின் உறவினர்கள் வயல்வெளியில் தனிமையில் இருக்கிறாரா? என மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேடினர். நேற்று இரவு அங்குள்ள கிணற்று படியில் குழந்தை அழும் சப்தம் கேட்டு குமாரின் உறவினர்கள் சென்றனர். அங்கு குழந்தை சுபஸ்ரீ மட்டும் தனியாக அழுது கொண்டிருந்தைப் பார்த்து அதிர்ந்தனர். தொடர்ந்து, அவர்கள் குமார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாக மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.