நெல்லை ரயில்நிலையம் அருகே நடந்து வந்த நரிக்குறவர் மயங்கிவிழுந்து பரிதாப சாவு

A-fox-walking-near-Nellai-railway-station-fainted-and-died-tragically

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் ஏழுமலை (25) இவருக்கு மனைவி மற் றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த ஓராண்டாக மஞ் சட்காமாலை உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட இவர், வள்ளியூர் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்தார். உறவினர்களுடன் தென்காசி சென்ற இவர், பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் புறப்பட்டு நேற்று மதியம் நெல்லை வந்துசேர்ந்தார். நெல்லையில் இறங்கி ரயில் நிலையத்தில் இருந்து வெளி வந்து நடந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார். இதை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த நெல்லை சந்திப்பு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். ஏழுமலைர உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்தது தெரியவந்ததால், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.