
திருநெல்வேலி சி எஸ் ஐ திருமண்டலம் டி டி டிஏ தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பள்ளி சீரமைப்பு மாநாடு டோனாவூர் உவாக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லை திருமண்டல பேராயர் ஏ. ஆர். ஜி. எஸ். டி .பர்னபாஸ் தலைமை தாங்கினார் .தெற்கு சபை மன்ற தொடக்கப் பள்ளிகளுக்கான 2025 ஆம் ஆண்டிற்கான திருமண்டல அளவிலான சாராள் டக்கர் விருதை திசையன்விளை மடத்தச்சம்பாடு சேகரம் ஜோதி நகரம் டி. டி. டி .ஏ .தொடக்கப்பள்ளி பெற்றது. இந்த விருதை பேராயர் பர்னபாசிடத்தில் இருந்து பள்ளியின் தாளாளர் ஏ. செல்வராஜ், சேகரகுரு செல்வநவமணி, தலைமை ஆசிரியை செல்வ சுந்தரி மற்றும் உதவி ஆசிரியை ஜெஸ்ஸிமா இந்திராணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .விருது பெற்ற பள்ளியை சேகர மக்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மனமார பாராட்டினர்.