விஜய நாராயணம் : அ.ம. மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் ஊராட்சி ஐந்தாம்கால் கிராமத்தில் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா , தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் . அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இசக்கிமுத்து தலைமையில், கழக மருத்துவர் அணி இணைச்செயலாளர், இட்டமொழி டாக்டர் நோவாசெல்வராஜ் , கழக இளைஞர் பாசறை பொருளாளர் ஏ.எஸ்.முருகன் , கழக வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் வழக்கறிஞர் ஞானசங்கர் ஆகியார் முன்னிலையில், கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் .

பின்னர் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி யில் திருநெல்வேலி மாநகர் மாவட்டகழகபொருளாளர் வழக்கறிஞர் மாரியப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் இசக்கிராஜா, மேலப்பாளையம் மேற்கு பகுதி கழகச்செயலாளர் அசன்கான், ஒன்றிய கழகச் செயலாளர்கள், நாங்குநேரி வழக்கறிஞர் செல்லத்துரை, களக்காடு ராஜசேகர், மாவட்ட பிரதிநிதி, குமாரசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர்பூல்பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ரமேஷ், ஊராட்சி கழக செயலாளர் கள் இட்டமொழி ஜெகதீஷ், இலங்குளம் முருகன், அரியகுளம் சுந்தரம், கழக நிர்வாகிகள் இசக்கிபாண்டி, முருகன், சுடலை, முத்துப்பாண்டி, முத்துவேல், ஆனந்தி, பத்திரத்தாய்,செல்வகுமார், தங்கபுஷ்பம், லிங்ககனி, சுரேஷ், லிங்கம், ரத்தினபாண்டி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர். நோவா செல்வராஜ் செய்திருந்தார்.