மாஞ்சோலை: மக்கள் வெளியேறினாலும் நடந்தேறிய குருத்தோலை ஞாயிறு பவனி

ஒவ்வொரு வருடமும் மாஞ்சோலை பகுதியில் குருத்தோலை ஞாயிறு தினத்தில் எஸ்டேட் பகுதியில் தென்னை ஓலைகளை கையில் ஏந்தியபடி கிறிஸ்துவ பாடல்கள் பாடி மக்கன் பவனியாக செல்வது வழக்கம்.இந்த ஆண்டு எஸ்டேட் பகுதியில் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். எனினும், இந்த ஆண்டும் நேற்று மாஞ்சோலை கிறுஸ்துநாதர் ஆலயம் மற்றும் புனித அந்தோனியார் ஆலய சபை மக்கள் கூடி குருத்தோலை ஞாயிறு தினத்தை அனுசரித்தனர். மாஞ்சோலை புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து தொடங்கி பவனி கிறுஸ்துநாதர் ஆலயத்தில் முடிவடைந்தது. மேலும் கிறுஸ்துநாதர் ஆலயத்தில் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சபை குரு ஏ.ஆண்ட்ரூ தலைமையில் இளைஞர்கள் செய்திருந்தனர்.