
டாக்டர். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் விழா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1384 பயனாளிகளுக்கு 9 கோடியே 62 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சமத்துவநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ராபர்புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது, சனாதனத்தின் அடிப்படை ஜாதி ரீதியாக மக்களை பிளவு படுத்துவது. இதைத்தான் க துணை முதல்வர் குறிப்பிட்டு சொன்னார்களே தவிர சனாதனமும் இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் ஒன்று அல்ல , சனாதன தர்மம் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தம், இதனை திராவிட கொள்கையை பின்பற்றுபவர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் பிறப்பின் அடிப்படையில் பிரித்து பார்ப்பது சனாதனம், அதை எதிர்ப்பது சமூக நீதி, சமத்துவம், இதுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் . ஆனால் ஒருபோதும் அவர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தியா மதசார்பற்ற நாடு இல்லை, மதசார்பு உள்ள நாடு என கூறியவர் ஆளுனர். அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் தலைவர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார், அவர் கூறியதை யாரும் நியாயப்படுத்தி பேசவில்லை .
இவ்வாறு அவர் கூறினார்.