விஜயாபதி : கொத்தன்குளத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் விஜயாபதி ஊராட்சி கொத்தன்குளத்தில் அண்ணல் அம்பேத்கார் 134 வது பிறந்தநாள்விழா நடைபெற்றது. விழாவில் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அம்பேத்கார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். கொத்தன்குளம் அம்பேத்கார் நற்பணி மன்ற நிர்வாகி ஞானசேது முன்னிலை வகித்தார். அஜித்குமார் தலைமை வகித்தார் . சாம்வினித் வரவேற்றார். மாணிக்கராஜ் நன்றியுரையாற்றினார். விழாவில் கொத்தன்குளம் மனுவேல், பிரேமகீதா, ஆவுடையாள்புரம் முத்துசெல்வன், எழில் அரசு, முத்து சதீஷ் மற்றும் கொத்தன்குளம் ஊர் பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் . அம்பேத்கார் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஏசுராஜா நிகழ்ச்சி ஏற்படுகளை செய்திருந்தார்.