
திசையன்விளை யில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திசையன்விளை பேரூராட்சி செல்வ மருதூர், பழைய பேருந்து நிலையம், கக்கன் நகர் ஆகிய இடங்களில் அண்ணல் அம்பேத்கர் 134 வந்து பிறந்த நாள் விழா நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ராஜகோபால் தலைமையில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எஸ்.வடிவேல் முருகன் திசையன்விளை பேரூர் கழக செயலாளர் கில்லி ராஜா முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர்,இனிப்புகள் வழங்கப்பட்டன.செல்வமருதூரில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் டிபன் பாக்ஸ் போன்றவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி மாவட்ட இணைச் செயலாளர் காட்வின் பிரசாத் , மாவட்ட வழக்கறிஞர் அணி இணை அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் தளபதி கணேஷ், நகர பொருளாளர் தினேஷ்,வர்க்கீஸ், சுரேஷ் ,நவாஸ், பேச்சிமுத்து, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருநெல்வேலி தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எஸ்.வடிவேல் முருகன் மற்றும் திசையன்விளை பேரூர் கழக செயலாளர் கில்லி ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.