நெல்லையில் பென்சில் கொடுககல் வாங்கலில் பள்ளியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் இருவருக்கிடையே பென்சில் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோபமடைந்த மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளார். தடுகக சென்ற ஆசிரியருக்கும் வெட்டு விழுந்தது. வெட்டுப்பட்ட மாணவர் மற்றும் தடுக்க முயன்ற ஆசிரியர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்ததுள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.