திமுக கவுன்சிலரின் கணவர் அட்டகாசம் : பட்டா நிலத்தில் மண் அள்ளியவர் மீது வழக்கு

case-filed-against-person-who-dug-soil-on-patta-land

பணகுடி இரயில் நிலையம் அருகே இரவு நேரத்தில் பட்டா இடத்தில் அனுமதியின்றி மண் எடுத்த திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.“

நெல்லை மாவட்டம் பணகுடி ரயில்வே நிலையம் அருகே தனிநபருக்கு சொந்த மான இடத்தில் இரவு நேரத்தில் மண் கடத்துவதாக பணகுடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனடிப்படியில் அப்பகுதிக்கு போலீசார் சென்றதும் ஜேசிபி மற்றும் மினி லாரிகளில் மண் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து மண் அள்ளியதாக பணகுடி 13 வது வார்டு கவுன்சிலரின் கணவர் சுதாகர் , சிவகாமி புரத்தை சேர்ந்த சிவக்குமார் ,மகேஷ்
உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகுமார் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை பணகுடி போலீசார் தேடி வருகின்றனர். மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.