
கோடை வெயிலின் தாக் கம் அதிகரித்ததால், நெல்லையில் எலுமிச்சை பழம் விலை கிடுகிடு வென்று உயர்ந்து ஒரு கிலோ ரூ.120-க்கு விற் பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் காலை 8 மணி முதலே சுட்டெரிக்கும் வெயிலால் அனல் காற்று வீசு கிறது. இதனால் வாகன ஓட் டிகளும், பொதுமக்களும் கடும் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தொடும் அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் சாலைகளில் பகல் நேரங்களில் மக் கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள ஜூஸ் உள்ளிட்ட குளிர்பான வகைகளை மக்கள் அதிகம் குடிக்க தொடங் கியுள்ளனர். இதனால் . சாலையோரங்களில் இளநீர், சர்பத் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் திடீர் கடைகளும் அதிகமாக முளைத்துள்ளன. தற்போது உடலில் தண்ணீர் சத்தை அதிகமாக்க மக்கள் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால், எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித் துள்ளது.
வழக்கமாக நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 5 டன் முதல் 7 டன் வரையிலும் எலுமிச்சைபழம் லோடு விற்பனைக்கு வருவது வழக்கம். இவை பெரும்பா லும் புளியங்குடி மார்க்கெட்டில் இருந்தே அதிகமாக வந்தது. ஆனால் தற்போது கோடை வெயிலால் அவற்றின் வரத்து தென்காசி உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு சென்றுவிடுகிறது. இதனால் நெல்லை டவுன் மார்க்கெட்டிற்கு எலுமிச்சை பழம் லோடு வரத்து குறைந்துள்ளது.
எலுமிச்சை பழம் ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனையானது. தற்போது கயத்தாறு . வில்லிசேரி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால். அவை பழங்களாக பழுக்கா மல் பச்சை நிறத்தில் இருப்பதால் அதனை பெரும்பாலான வியாபாரிகள் வாங்க விரும்பவில்லை.
அதற்கு மாறாக புளியங்குடி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மஞ்சள் நிற எலுமிச்சை பழங்களையே மக்கள் விரும்புவதால் வியாபாரிகள் அதனை அதிக அளவில் கொள்முதல் செய்கின்றனர். அந்த பழங்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளதால் நெல்லை டவுன் மார்க்கெட்டில்1கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சை பழங்களின் விலைகிடுகிடுவென்று உயர்ந்தாலும் பொதுமக்கள், வியாபாரிகள் போட்டி போட்டு அவற்றை வாங்கி செல்கின்றனர்