சுத்தமல்லியில் தரவு விழிப்புணர்வு கிராம சபை - தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புதிய முயற்சி

Data-Awareness-Gram-Sabha-in-Suttamalli-A-New-Initiative-of-the-National-Statistical-Office

இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் அமைச்சகத்தின்க கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), தேசிய மாதிரி ஆய்வுகளின் (NSS) 75வது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்தியா முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் (கள இயக்கப் பிரிவு), திருநெல்வேலி துணை மண்டல அலுவலகம், சார்பாக ஏப்ரல் 29ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தில் விழிப்புணர்வு கிராம சபை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுத்தமல்லி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. திருநெல்வேலி எஸ்ஆர்ஓ உதவி இயக்குநர் அஜித்குமார், ஐ.எஸ்.எஸ்., மற்றும் பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அஜித் குமார், தரவு சார்ந்த நிர்வாகம் என்பது ஒரு சுருக்கமான கருத்து அல்ல; நாம் பார்வையிடும் ஒவ்வொரு வீடு, கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலிருந்தும் தொடங்குகிறது" என்று அவர் கூறினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், நோய் கண்காணிப்பு மற்றும் சமூக சுகாதாரத் திட்டமிடலில் பொது சுகாதாரத் தரவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மூத்த புள்ளியியல் அதிகாரி தீபக் டாக்டர் குருநாதன், காவல் கண்காணிப்பாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோரை பாராட்டினார்.


நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர், வட்டார மருத்துவ அலுவலர், போலீஸ் அதிகாரிகள், உள்ளூர் அலுவலர்கள், கிராம மக்கள் மற்றும் NSO குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சர்வே கணக்கெடுப்பாளர் ஜே. ஜான் ஜோசப் நன்றியுரை கூறினார்.