சீத்தலை சிவலிங்கேஸ்வரர் கோவிலில் பூசாரிக்கு மாத சம்பளம் ரூ.100- ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்

monthly-salary-of-priest-at-seethalai-sivalingeswarar-temple-is-rs-100-rti

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் உறுமன்குளம் - சீத்தலை சிவலிங்கேஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறையின் முறைகேடு தொடர்பாக ஆர்டிஐ யில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இராமலிங்கம் என்பவர் கேட்ட கேள்விகளுக்கு, இந்த அறநிலையத்துறை கொடுத்த பதில்தான் அதிர்ச்சி ரகமாக உள்ளது. அதில் , பூசாரி மாத சம்பளம் ரூ.100 வழங்கப்படகிறது என்றும் பூஜை செலவு மாதம் ரூ.200 ஆகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமாக நஞ்சை 30 ஏக்கர் , புஞ்சை 67 ஏக்கர் சொத்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், கோவிலைப் பராமரிக்கும் அறநிலைய துறைக்கு கோவிலின் வருமானம் தெரியாதாம் என்றும் குத்தகைக்காரரின் பெயரை குறிப்பிடுங்கள் என்றால் அவேரி பெயரை சொன்னால் குத்தகைக்காரருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.