திசையன்விளை: கோவில் மண்டபம் கட்ட தமிழக வெற்றி கழகம் நன்கொடை.

tvk-donates-to-build-a-temple-hall-thisayanvilai

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்பு விளை ஊராட்சி கக்கன் நகரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு, புதிதாக மண்டபம் மற்றும் கோபுரம் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டுவதற்கு நிர்வாகிகள் த.வெ.க கட்சியிடத்தில் நிதி கேட்டிருந்தனர். அவர்களின் வேண்டுகோளையேற்று தமிழக வெற்றி கழக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன் ரூ1 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்களை நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால் முன்னிலையில் வழங்கினார். அப்போது, மாவட்ட இணைச் செயலாளர் உவரி பிரசாத் திசையன்விளை பேரூர் கழக செயலாளர் கில்லி ராஜா ஆகியோர் உடனிருந்தனர். கட்டுமான பொருட்களை பெற்று கொண்ட கோவில் நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.