.jpeg)
நண்பர்களுக்குள் Whatsapp குரூப்பில் பேசுவதை தவிர்த்து நேரடியாக பேசுங்கள், நல்ல நிகழ்ச்சிகளில் ஒன்று சேருங்கள், நட்பை வளருங்கள் என்று நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நடந்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேராசிரியர் ஒருவர் அறிவுரை வழங்கினார்.
நெல்லை, பேட்டையில் 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லுரி உள்ளது. இங்கு கடந்த 1997 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் வணிகவியல் துறையில் பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் சந்திக்கும் "Alumni Meet 25" வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்வில் பங்கேற்க பெங்களூர், டெல்லி என பல நகரங்களில் இருந்தும் அமெரிக்கா மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகளில் இருந்தும் கூட மாணவர்கள் வந்திருந்தனர். படித்த சக மாணவர்களான நண்பர்களையும், கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் ஒருசேர கண்டு மகிழ்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டதால் நண்பர்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் ராமச்சந்திரன் பேசும்போது, ' அலுமினி சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதும் மாணவர்கள் whatsapp குரூப் ஆரம்பிக்கிறார்கள். குரூப்பில் எண்ணிக்கை பெரிதானதும் அரசியல் பேச தொடங்குகிறார்கள். அது சண்டையில் முடிகிறது. எனவே வாட்ஸ் அப் குரூப்பை நட்புக்காக மட்டும் பயன்படுத்துங்கள். இன்று கூட பி.காம் மாணவர்களின் whatsapp குரூப்பில் பகல்காம் தாக்குதல் குறித்து பதிவுவுக்கு பல மாறுபட்ட கருத்துக்களை பார்த்தேன். அது தேவையா ? என்றால் தேவையில்லை . நம்மால் ஒன்றும் செய்ய முடியாது . எந்த கட்சியை எதிர்த்தோ நாம் எதுவும் செய்ய முடியாது . இதற்கு எதற்கு நண்பர்களுக்குள் சண்டை போட வேண்டும் ? குரூப்பில் குழந்தைகளுக்கு பிறந்தநாள், திருமணநாள் நிகழ்வுகளை வாழ்த்துக்களை பதிவிடுங்கள். தயவுசெய்து Whatsapp குரூப் ஆரம்பித்து உங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தி விடாதீர்கள். எனவே கவனமாக இருங்கள் . நட்பை வளர்க்க என்ன வழி உண்டு என பாருங்கள். எனவே குரூப்பில் பதிவு செய்வதை விட முடிந்த அளவு நேரடியாக பேச பாருங்கள். நல்ல நிகழ்வுகளுக்கு ஒன்று சேருங்கள். நட்பை வளருங்கள்' என்றார்.
வாழ்க்கைக்கு தேவையான ஆழமான உண்மையான கருத்துக்களை நகைச்சுவையாக மாணவர்களிடம் பேராசிரியர் ராமச்சந்திரன் எடுத்துரைத்தது அனைவரையும் ஈர்த்தது.