
தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான இரண்டு நாள் இலவச ட்ரோன் பயிற்சி முகாம் நடைபெற்றது .
கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நெல்லை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மூலம் 'நட்சத்திரம் தொடுவோம்' என்ற தலைப்பில் இரண்டு நாள் ட்ரோன் பயிற்சி முகாம் நடை பெற்றது. நெல்லை டவுன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நெல்லை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஈ 2 டு டெக்னோவேஷன் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த முகாமில் 100 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ட்ரோன்கள் என்றால் என்ன ? எவ்வாறு அவை செயல்படுகிறது? போன்ற விளக்கங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன. தனித்தனியாக மாணவ மாணவிகளுக்கு ட்ரோன்களை இயக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.