
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் (TvMCH) சிறப்பு சிகிச்சை பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கம் (OT) மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் பராமரிக்கப்படும் வார்டில் கடந்த 10 நாட்களாக ஏசிக செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதனால், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளும், பணியாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மருத்துவர் ஒருவர் கூறுகையில், "அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களின் வியர்வை நோயாளிகளின் உடல் உறுப்புகளில் விழுகிறது. அறுவை சிகிச்சை அரங்கில் 6 பெட்கள் உள்ளன. ஒவ்வொரு அறுவை சிகிச்சையின்போதும் சிறப்பு மருத்துவர்கள் உட்பட குறைந்தது 30 பணியாளர்கள் அறுவை சிகிச்சை உடைகளை அணிந்து பணியாற்றுகிறோம். தேசிய மருத்துவ ஆணையத்தின் கட்டாய விதிகளின்படி, வேறு காற்றோட்ட வசதிகள் இல்லாததால், இந்த அரங்கம் முழுமையாக குளிரூட்டப்படும் அமைப்பை மட்டுமே நம்பியுள்ளது. சில அறுவை சிகிச்சைகள் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும். கடந்த 10 நாட்களாக இந்த வசதி செயல்படாததால், நாங்களும் உதவியாளர்களும் மிகுந்த சிரமப்படுகிறோம்," என்று கூறினார்.
மற்றொரு மருத்துவர் கூறுகையில், நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், குளிரூட்டும் அமைப்பில் உள்ள பழுதை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வசதியைப் பராமரிக்க நியமிக்கப்பட்ட நிறுவனம் ஒப்பந்தத்தின்படி அவ்வப்போது பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ளத் தவறிவிட்டது ' என்கிறார்.
அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வார்டில் உள்ள நோயாளிகளும் ஏசி செயல்படவில்லை. நோயாளிகள் கூறுகையில்"அறுவை சிகிச்சை அரங்கில் நாங்கள் மயக்கத்தில் இருந்ததால் வலியை உணரவில்லை. ஆனால் , அறுவை சிகிச்சைக்குப் பிறகு, எங்கள் காயங்களின் வலியை உணரத் தொடங்குகிறோம். ஏசி இல்லாததால், இது நரகமாக இருக்கிறது. தற்காலிக தீர்வாக மருத்துவமனை நிர்வாகம் மின்விசிறிகளை வழங்கியுள்ளது. இருப்பினும், இந்த கோடை நாட்களில் அந்த விசிறிகள் சூடான காற்றை மட்டுமே தருகின்றன ''என்கின்றனர்.
இது தொடர்பாக மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன் கூறுகையில், 'மூன்று நாட்களுக்கு முன்பு பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதுமு. பழுதுபார்க்கும் பணிகளுக்காக சென்னையில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வர வேண்டியிருந்தது. இதுபோன்ற பணிகளைப் செய்வது பொதுப்பணித்துறையின் பொறுப்பு. கட்டடத்தில் மேற்கூரை மின்விசிறிகள் பொருத்த வசதியில்லை. இருப்பினும், அறுவை சிகிச்சை அரங்கப் பணியாளர்களுக்காக சில சிறிய மின்விசிறிகளை ஏற்பாடு செய்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.