
சமீபத்தில் திருநெல்வேலி பாளையங்கோட்டை ரோஸ்மேரி மாடல் தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் அரிவாளால் வெட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பென்சில் தொடர்பாக இரு மாணவர்களிடம் ஏற்பட்ட பிரச்சினையே இந்த சம்பவத்துக்கு காரணமாக அமைந்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வில் ரோஸ்மேரி மாடல் பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவன் பிரனவ் நந்தன் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 -ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்தான்.
சாதனை படைத்த மாணவனை பள்ளி தாளாளர் சுசித்ரா ஜெய்ரஸ், பள்ளி இயக்குனர் ஜெய்ரஸ் பொன்னையா, பள்ளி முதல்வர் ஜெயந்தி சங்கர் ஆகியோர் பாராட்டினர்.