தேர்சியைடந்த அனைவரும் 400 மதிப்பெண்களுக்கு மேல்... வடக்கன்குளம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் அபார சாதனை

Vadakankulam-S-A-V-Balakrishna-School-students-achieve-a-remarkable-achievement-10th-result

வடக்கன்குளம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி லஹைனா 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த பள்ளியில் அரசுபொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக இந்த கல்வி ஆண்டிலும் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியை சேர்ந்த மாணவன் மதுபால கிருஷ்ணா 494 மதிப்பெண்கள், மாணவிகள் ஃபெடோரா மற்றும் யாழினி நிதுரா 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 322 மாணவர்களில் 480 மதிப்பெண்களுக்கு மேல் 31 பேரும், 450 க்கு மேல் 113 பேரும், 400 க்கு மேல் 191 பேரும் பெற்று சாதனை படைத்தனர். பாடவாரியாக கணிதம் 7 பேர், அறிவியல் 11 பேர், சமுக அறிவியல் 18 பேர் என மொத்தம் 36 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் பிரஜேஷ் குமார் 494 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மிதுன் நாகேந்திரா 479 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சுபஸ்ரீ 475 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்த பள்ளியில் 14 மாணவர்கள் 450 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று இருந்தனர். 10ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் தேவ சகாய ஆண்ட்ரியா 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ஹன்சிகா 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஜெய்வந்த் 480 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும் 19 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 450 மதிப்பெண் பெற்றிருந்தனர். பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர்கள் திவாகரன், அஜேஸ் லால், பள்ளி முதல்வர்கள் சுடலையாண்டி பிள்ளை, பால பெஞ்சமின், பள்ளி நிர்வாகி பிந்துஜா ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.