
திசையன்விளை வி.வி.பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வி.வி. பொறியியல் கல்லூரியில் 2012-16 ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பி.வனிதா முன்னிலை வகித்தார். மெக்கானிக்கல் துறை தலைவர் முனைவர் பத்மநாபன் முன்னாள் மாணவ, மாணவிகளை வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற காலத்தில் உள்ள மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த காலத்தில் (2012-16) சிவில் இன்ஜினியரிங் துறையில் பயின்ற மாணவர் மகேந்திரன் தற்போது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று கூடுதல் ஆட்சியராக பணி ஆணை பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி அலுமினி செல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஐடாவதி குணசீலி செய்து இருந்தார்.