முருக பக்தர்கள் மாநாடு... திசையன்விளை, நவ்வலடியில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

Hindu-munnani-consultative-meeting-in-thisayanvilai-Navvaladi

ராதாபுரம் ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் திசையன்விளையில் வைத்து, வேல் வழிபாடு மற்றும் ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் ஜூன் மாதம் 22ஆம் தேதி நடைபெற இருக்கின்ற முருக பக்தர்கள் மாநாடு மிக சிறப்பாக நடைபெற வேண்டியும், அதில் கலந்து கொள்பவர்களின் நன்மைக்காகவும் சிறப்பு வேல் வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது.

இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விக்னேஷ் முன்னிலை வகிக்க, இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி யில் இந்து முன்னணி நிர்வாகிகள் செந்தில், ராஜா, மணிகண்டன் இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் ராஜேஸ்வரி, கலா, அமுதா ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் துரைப்பாண்டி, சின்னதுரை , சுந்தர பெருமாள்,பாஜக நிர்வாகிகள் அழகேஸ்வரன், இரங்கநாதன் அகில பாரத இந்து மகாசபா ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராதாபுரம் ஒன்றியம் நவ்வலடி விநாயகர் கோவிலில் வேல் வழிபாடு மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விக்னேஷ் முன்னிலை வகிக்க, ஆர் .எஸ் .எஸ் திருநெல்வேலி ஜில்லா கார்யவாஹ் மா.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் செந்தில், ராஜா, மணிகண்டன் பாஜக நிர்வாகிகள் பூபதி , சுப்பிரமணியன், மதன், ரேகா, தமிழரசி ஆகியோர் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.மதுரையில் நடைபெற இருக்கின்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அதிகப்படியான முருக பக்தர்கள் மற்றும் இந்து மக்கள் கலந்து கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.