நாங்குநேரி : ஒரே பள்ளியில் 10 , 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்து அசத்திய அண்ணன், தம்பி

nanguneri-brother-and-sister-who-topped-both-10th-and-12th-grades-in-the-same-school

நாங்குநேரி அருகே அண்ணன், தம்பி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் அமைந்துள்ள சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் புத்தனேரி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார், கிறிஸ்டல் சுகந்தா பாய் என்ற தம்பதியின் சேகர முத்துக்குமார், சேகர தமிழ்முத்துக்குமார் என்ற இரு மகன்களும் முறையே 12 மற்றும் 10ம் வகுப்பு படித்து வந்தனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 12ம் வகுப்பில் சேகர முத்துக்குமார் 450 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். இவரின் சகோதரர் சேகர தமிழ்முத்துக்குமார் 10ம் வகுப்பில் 403 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளார். இந்த அரசு பள்ளி மாணவர்கள் ஆழ்வார் என்ற ஆசிரியரிடத்தில் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தனர். இந்த மாணவர்கள் நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.