பாளையங்கோட்டை: விசுவலி சேலஞ்ச் வெல்ஃபேல் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்ட 37 லட்சம் கடன் சபாநாயகர் பாராட்டு

Palayankottai-37-lakh-loan-for-building-houses-for-members-of-Visuvali-Challenge-Welfare-Association

திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, பாளையங்கோட்டை பகுதியில் பெருமைகளை பட்டியலிட்டார். அப்போது, அவர் கூறியதாவது,

பாளையங்கோட்டை பகுதி, தென்னிந்திய திருச்சபை பள்ளிகள், கல்லூரிகள், மகளிர் பள்ளிகள் எனப் பல கல்வி நிறுவனங்களை முதன்முதலில் நிறுவி, கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது. 1883 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே இரண்டாவது பார்வையற்றோர் பள்ளியையும், மூன்றாவது காதுகேளாதோர் பள்ளியையும் இங்கு தொடங்கப்பட்டது. கல்வி விழிப்புணர்விலும், சமூக நீதியிலும் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது. குறிப்பாக, சேரன்மகாதேவி குருகுலத்தில் உயர்சாதியினர் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலை இருந்தபோது, அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்கத்தில் பாளையங்கோட்டையின் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டன.

பார்வையற்றோருக்காக ஆக்ஸ்வித் அம்மையாரால் தொடங்கப்பட்ட பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய ஜான் எமனேசர், ஓய்வுபெற்ற பிறகு, மாணவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் விசுவலி சேலஞ்சு வெல்ஃபேர் டிரஸ்ட் என்ற அமைப்பை 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். 9 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, இன்று நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் அளவுக்குப் பணப்பரிமாற்றம் செய்யும் மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. உறுப்பினர்களுக்கு ஒரு சதவீதம் வட்டியில் ₹37 லட்சம் வரை வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. கட்டப்படும் வட்டியில் பாதிப் பணம் கடன் வாங்கியவரின் சேமிப்புக் கணக்கிற்கே திருப்பிச் செலுத்தப்படுவது இந்த அமைப்பின் தனித்துவமான சிறப்பம்சமாகும். தற்போது .கருப்பசாமி டேவிட் என்பவர் இந்த அறக்கட்டளையை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்

இவ்வாறு அவர் பேசினார்.