
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா நிறுத்தியது வெட்கக்கேடான செயல் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
பீகார், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தைப் புறக்கணித்ததைச் சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவதாகவும், மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதி, குறிப்பாக சமக்ர சிக்ஷா நிதி, 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டிற்கான நிதி, பேரிடர் கால நிவாரண நிதி போன்றவை வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொண்டு, தமிழ்நாட்டிற்கு உரிய நிதி உரிமைகளை வலியுறுத்தியது நல்லதுதான். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் நல்லது நடக்கும்.
இந்தியா தீவிரவாத நாடு அல்ல என்பதையும், பாகிஸ்தானே தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்பதையும் உலக அரங்கில் எடுத்துரைக்க வேண்டிய நிலை உருவாகியிருப்பது இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையையே காட்டுகிறதுழ. பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாகக் குறிப்பிட எந்த நாடும் ஆதரவளிக்கவில்லையே. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும்போது, இந்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை . இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையவுள்ள இலங்கையின் அம்பன்போட்டா துறைமுகத்தை சீனாவிடம் இருந்து மீட்க இந்திய அரசு முயற்சிக்கவில்லை. மாறாக கார்ப்பரேட்டுகளின் 16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்வதில் ஆர்வம் காட்டுகிறது. டிரம்ப் கூறி போரை நிறுத்தியது இன்னும் வெட்கக்கேடாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.