அணுஉலையில் இருந்து ஊருக்கே மின் சப்ளை... கரண்ட் இல்லாமல் தவிக்கும் கூடன்குளம்

power-supply-from-the-nuclear-reactor-to-the-town-koodankulam-suffers-without-electricity

அணுமின் நிலையம் அமைந்திருக்கும் கூடங்குளத்தில் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஊருக்கே மின்சாரம் சப்ளை செய்தாலும் கூடன்குளம் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் தவிக்கும் நிலை காணப்படுகிறது. வயர்மேன் இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை, தற்காலிக பணியாளரான கூடன்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனடியாக , கஸ்தூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டாலும், உரிய அலுவலர்கள் இல்லை என்பதாலும், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர் . சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கூடங்குளத்திற்கு வயர்மேனை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.