
திருநெல்வேலியில் சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்கள் நடைபெற்றது. 1996 ஆம் ஆண்டு திமுக அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அணுமின் நிலைய கழக தலைவர் நேரடியாக மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கான பணி வழங்குவதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு எழுத்து தேர்வு இல்லாமல் பலபேர் பணியில் சேர்ந்னதர். ஆனால் 2021 ம் ஆண்டு முதல் ஒருவருக்கு கூட வேலை கொடுக்கப்படவில்லை. சி மற்றும் டி பணியிடத்திற்கு எழுத்து தேர்வு வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து போராடினோம். இதனால், தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டது- இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கு.ம
தமிழக சட்டப்பேரவை ஆரம்பித்து 104 ஆண்டுகள் ஆகியுள்ளது. 1952 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டப்பேரவையில் எந்தெந்த தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பதை ஆன்லைனில் தேடினால் எடுத்துக் கொள்ளும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. 1921 முதல் 1952 வரையிலான சட்டமன்ற நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்றம் முடிவதற்குள் அனைத்து சட்டமன்ற பதிவுகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.