.jpg)
கோடை விடுமுறை முடிந்து, 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் வருகிற ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படுகின்றன. இதனையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பள்ளிக்கல்வி இயக்குநர் விடுத்துள்ள அறிவுறுத்தலின்படி, வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், கழிவறைகள் சுத்தம் செய்தல், சிறிய அளவிலான பழுதுகளை சரிபார்த்தல், வர்ணம் பூசுதல், சத்துணவுக் கூடங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை முதல் நாளிலேயே வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசி கட்ட மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகின்றன. மேலும், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. அனைத்துப் பணிகளும் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.