மூலைக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சி கூட்டம்

sdbi-party-meeting-at-moolaikkaraipatti

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயலக குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கே.பீர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் எம்.எஸ் சிராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர் களந்தை மீராசா , மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி தொடங்கப்பட்ட ஜுன் 21 ஆம் தேதி 17 வது ஆண்டு துவக்கவிழாவில் புறநகர் மாவட்டம் முழுவதும் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

ஜுன் 2 பள்ளிகள் திறக்கப்படுவதால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் உள்ள இருக்கைகள், கழிப்பறைகள் சரியாக இருக்க வேண்டுமென மாவட்ட பள்ளிகல்வியின் முதன்மை அலுவலர் மூலமாக ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. மூலைக்கரைப்பட்டியில் ஊருக்குள் பஸ் போக்குவரத்து மிகவும் நெருக்கடியாக இருப்பதால் மாற்றுவழிபாதை அமைக்க வேண்டுமென தீர்மானம் இயற்றப்பட்டது. இறுதியாக மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் முல்லை மஜீத் நன்றி கூறினார்